
Shivani singing video viral
தற்காலத்தில் சினிமாக்களை விட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பகல்நிலவு தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி. இவர் அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்து இருந்தார்
பின்னர் அத்தொடரை தொடர்ந்து அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சிவானி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு குஷிபடுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தனுஷ் படப் பாடலை மிகவும் அழகாக பாடியுள்ளார். மெல்லிய குரலில் இவர் பாடிய பாடலைக் கேட்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement