என்னது! இணையத்தையே திணறடிக்கும் கவர்ச்சிப்புயல் ஷிவானியின் உண்மையான வயது இதுதானா? தலைசுற்றிப்போன ரசிகர்கள்!



shivani-original-age-is-only-19

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் சமீபகாலமாக நாள்தோறும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் இவர் நடித்த சீரியலை பார்க்கும் ரசிகர்களை விட, இவரது போட்டோசூட் புகைப்படங்களை பார்ப்பதற்கு ரசிகர்பட்டாளம் ஏராளம். மேலும் ஷிவானி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தும்  வருகிறார்.

Shivani

இந்நிலையில் நேற்று ரசிகர் ஒருவர் உங்களுக்கு 21 வயது என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என கேட்டுள்ளார். அதற்கு ஷிவானி ஜீரணிக்க முடியவில்லை என்றால் ஜெலுசில் குடியுங்கள். மேலும் எனக்கு 19 வயதுதான் ஆகிறது என பதிலளித்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் ஷிவானிக்கு 19 வயதுதான் ஆகிறதா?  என பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.