BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மிக்ஜாம் புயலை துள்ளி குதித்து கொண்டாடிய ஷிவானி.. வீடியோவை பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
சின்னத்திரையில் சீரியலின் மூலம் பிரபலமானவராக இருந்து வருபவர் ஷிவானி நாராயணன். இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் மேலும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதற்கு முன்னதாக ஒரு சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

இது போன்ற நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் ஷிவானி நாராயணன், சென்னையில் மிக்ஜாம் புயலின் போது வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் ?மழையில் துள்ளி குதித்து விளையாடிய ஷிவானியை ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு ஒரு கேடு வர மாட்டேங்குது என்று கண்டபடி திட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.