உங்களுக்கு வெட்கமே இல்லையா? கிண்டல் செய்தவர்களை செம ஆவேசமாக லெப்ட் ரைட் வாங்கிய ஷிவானி!
உங்களுக்கு வெட்கமே இல்லையா? கிண்டல் செய்தவர்களை செம ஆவேசமாக லெப்ட் ரைட் வாங்கிய ஷிவானி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் சமீபகாலமாக நாள்தோறும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்த நிலையில் நெட்டிசன்கள் சிலர் அவரது உடை, நடனம் போன்றவற்றை மோசமாக கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கடுமையாக விளாசி ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கும், அடுத்தவர்களைப் பற்றி கேவலமாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் யூடியூப் ட்ரோல் பக்கங்களுக்கும், இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
நான் என்ன ஆடைகளை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் நான் எதையும் சுயமாக தேர்வு செய்ததற்கான சுதந்திரத்தை கொடுத்து என்னை நன்றாக வளர்த்துள்ளார்கள்.
நான் பதிவிடும் புகைப்படங்கள், நடனங்கள் போன்றவை யாரையும் கவர்வதற்கு கிடையாது. அந்த அவசியமும் எனக்கு கிடையாது. எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை யாரும் காயப்படுத்த முயற்சி செய்ய வேண்டாம். அதனால் நீங்கள் தோல்விதான் அடைவீர்கள் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.