விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவில்.. ப்ரியங்காவிற்கு பதில் இனி இவரா! செம சர்பிரைஸில் ரசிகர்கள்!!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஷோவில்.. ப்ரியங்காவிற்கு பதில் இனி இவரா! செம சர்பிரைஸில் ரசிகர்கள்!!



shivangi-may-be-host-super-singer-show

விஜய் தொலைக்காட்சியில் எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அவர் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கலகலப்பாக அனைவரும் ரசிக்கும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

அவர் மாகாபா ஆனந்துடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவ்வாறு இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி மக்களை கவர்ந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இதன் பல சீசன்களை அவர்கள் மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில்  விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

Sivangi

இந்த நிலையில் பிரியங்கா தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதால் அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதில்லை எனவும், அவருக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமடைந்த சிவாங்கி மாகாபாவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.