சினிமா

விழிப்புடன் இருங்க.. ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கணவர்! நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதை பார்த்தீர்களா!!

Summary:

தமிழில் சினிமாவில் நடிகர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி, தமிழ் ரசிகர்கள் ம

தமிழில் சினிமாவில் நடிகர் விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். ஷில்பா ஷெட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களையும், மாடல் அழகிகளையும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து அவற்றை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், தனது கணவர் கைதுக்கு பிறகு முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராமில் ஷில்பா ஷெட்டி ஒரு பதிவிட்டு உள்ளார். நடிகை ஷில்பா ஷெட்டி, நேற்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புத்தகத்தின் பக்கத்தை பகிர்ந்துள்ளார், இது எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பரின் புத்தகத்தின் ஒரு பக்கமாகத் தெரிகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள், "கோபத்தில் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது பயத்தில் முன்னோக்கிப் பார்க்க வேண்டாம் ஆனால் சுற்றி விழிப்புணர்வுடன் இருங்கள்.

நான் உயிருடன் இருப்பதற்கு அதிர்ஷ்டசாலி என்பதை அறிந்து ஆழ்ந்த மூச்சு விடுகிறேன். நான் கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்தேன், எதிர்காலத்தில் சவால்களில் இருந்து தப்பிப்பேன். இன்று என் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து என்னை திசை திருப்ப எதுவும் தேவையில்லை." என்ற வரிகள் அமைந்துள்ளது.


Advertisement