சண்டக்கோழி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான்.! மனம் திறந்த லிங்குசாமி.!

சண்டக்கோழி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது அவர்தான்.! மனம் திறந்த லிங்குசாமி.!



shewasthefirstactressinthemoviesandakozhiopenmindedling

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் மிகப் வெற்றியடைந்தது இந்த திரைப்படத்தின் திரைக்கதை முதலில் நடிகர் விஜய்யிடம் தான் சொல்லப்பட்டதாக தெரிகிறது. அதன் பிறகு தான் இந்த திரைப்படம் விஷால் நடிப்பில் வெளியானது இந்நிலையில் இது தொடர்பாக இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றை வழங்கி இருக்கிறார்.

அந்த பேட்டியில், "ஒவ்வொரு பகுதியிலும் ஒரு முக்கியமான ஆள் இருப்பார். அவரை யாரோ தெரியாத நபர் ஒருவர் அடித்து விட்டு சென்று விட்டால் என்ன நடக்கும்? என்பதை கதையாக நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்தோம். அப்போது நான், அடித்து விட்டுச் சென்றவன் அதைவிட பெரிய ஆளாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று சொன்னேன். அப்படித்தான் சண்டக்கோழி திரைப்படத்தின் கதை உருவானது.

lingusami

இந்த கதையை முதலில் உருவாக்கியவுடன் நான் விஜய் சாரிடம் சென்று சொன்னேன். கதையை அவருக்கு விவரித்துக்கொண்டிருந்தேன். ராஜ்கிரண் கதைக்குள் நுழையப் போகிறார் என்று சொன்னவுடனே, அவர் கதை சொல்வதை நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டார்.

ஏன் என்று கேட்ட பொழுது, ராஜ்கிரண் சார் வந்த பின்னர் அதற்கு மேல் அங்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டார். ஆனால் நான் அவரை சமாதானம் செய்து, இல்லை… ஒரு பத்து நிமிடம் 2-ம் பாதியை கேளுங்கள்.. உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னேன் ஆனால் விஜய் மிகவும் கறாராக இல்லை. இந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.

lingusami

இதையடுத்து படத்தை நான் விஷாலை வைத்து எடுத்தேன். படம் வெளியாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட்டானது. அதனைத்தொடர்ந்து பார்ட்டி ஒன்றில் நான் கலந்து கொண்டேன். அந்த பார்ட்டியில் பல முக்கியமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதில் விஜய் சாரும் கலந்து கொண்டார். தொலைவில் நான் நிற்பதை பார்த்த விஜய் சார் என்னிடம் வந்து.. அண்ணா படம் சூப்பராக இருந்தது என்றார். ஆனால் எனக்கு விஜய் மீது இந்த படத்தில் நடிக்கவில்லையே என்று உள்ளூர ஒரு கோபம் இருந்தது. உடனே நான் நீங்கள் தான் பாதிக்கு மேலே கதையைக் கேட்கவே இல்லை என்று கடிந்தேன். உடனே விஜய் சார் இல்லைன்னா.. இதுதான் சரியானது; திரைத்துறைக்கு இந்த மாதிரியான ஒருவன் வர வேண்டும் என்று இருந்திருக்கிறது என்று சொன்னார்." என பேசியுள்ளார்.