துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!
வீட்டை எதிர்த்து, நடுக்கடலில் திருமணம் செய்துகொண்ட திரௌபதி பட நடிகை! அவரது கணவர் யார்னு பார்த்தீர்களா!!
வீட்டை எதிர்த்து, நடுக்கடலில் திருமணம் செய்துகொண்ட திரௌபதி பட நடிகை! அவரது கணவர் யார்னு பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை பட இயக்குனர் ஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரௌபதி. சமூகத்தில் நிலவும் நாடக காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இப்படம் அமைந்தது.
இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்திருந்தார். ஹீரோயினாக ஷீலா என்பவர் நடித்திருந்தார். ஷீலா இதற்கு முன்பு டூலெட், மற்றும் அண்மையில் யோகி பாபு நடிப்பில் தொலைக்காட்சியில் வெளிவந்த மண்டேலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை ஷீலா திருமணமாகாதவர் என பலரும் எண்ணி வருகின்றனர். ஆனால் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை காதலித்து, பெற்றோர்களை எதிர்த்து நடுக்கடலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஷீலா நடுக்கடலில் மாலையும் கழுத்துமாக ஜோடியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.