சினிமா

முதல் முறையாக தளபதி படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார்! யார் தெரியுமா?

Summary:

Sharukhan casting in thalapathi 63 movie

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் விஜய். தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக தளபதி 63 படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படமானது ஷூட்டிங் தொடங்கி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்ட படமாக இருக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகள் படத்தில் நடித்துவருகின்றனர்.

இந்நிலையில் தளபதி 63 படத்தில் போலீஸ் வேடத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.


Advertisement