நடிகை நயன்தாரா வீட்டிற்கு சென்ற பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான்.! ஏன்? இதுதான் காரணமா??Sharuk khan went to nayanthara house to see her babies

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகை தாய் மூலம் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கிறார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Sharuk khan

இந்த நிலையில் சென்னை வந்த நடிகர் ஷாருக்கான் நயன்தாரா வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அவர் நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகளை காண சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பிய அவரை நயன்தாரா வாசல் வரை வந்து வழியனுப்பியுள்ளார். அப்பொழுது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.