அடேங்கப்பா இவ்வளவு பழசா? ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த சாந்தனுவின் மனைவி.! என்ன கூறியுள்ளார் தெரியுமா?



shanthanu wife keerthi tweet about her saree

தமிழ் சினிமாவில் வேட்டிய மடிச்சு கட்டு என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாபெரும் முன்னணி திரைப்பிரபலங்களான பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோரின் மகன் சாந்தனு. 

அதனை தொடர்ந்து அவர் சக்கரகட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். மேலும் அவர் ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைப்பேசி, சித்து பிளஸ் 2, கண்டேன், முப்பரிமாணம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த நடன கலைஞர் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் ஜோடியாக தங்களது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். 

shanthanu

அத்தகைய அழகிய ஜோடி தற்போது பாரம்பரிய உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் குடும்பத்துடன் பங்கேற்ற போது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தான் கட்டியிருக்கும் புடவையை குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அதாவது கீர்த்தி நான் உடுத்தியிருக்கும் சேலை எனது பாட்டியின் சேலை, எழுபது வருடம் பழமையானது. ஆனால் பார்ப்பதற்கு புதியதாகவும்,அழகாகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.