
Shanthanu went to dhoni hotel room to watch IPL Match
தமிழ் சினிமாவில் சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். சாந்தனு, நடிகர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதியரின் மகனாவார். அவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார்.
நடிகர் சாந்தனு கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகராவார். மற்றும் தோனியின் வெறித்தனமான ரசிகரும் கூட.
இந்நிலையில் ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டிகள் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
முதல் ஆட்டத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதியது. மேலும் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றியும் பெற்றது. இந்தப் போட்டிகளை நேரில் சென்று பார்க்க முடியாத நிலையில், நடிகர் சாந்தனு தனது மனைவி கீர்த்தியுடன் தோனியின் ரூமில் இருந்து கண்டு மகிழ்ந்துள்ளார்.
See how I got @KikiVijay to watch the first #IPL game yesterday
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 20, 2020
“A Day in Dhoni’s Room”https://t.co/gceLiekuSy #WithLoveShanthnuKiki #CSK #Dhonism #MSDhoni #Yellove @Pickyourtrail @CrownePlazaChn
*Not a paid promotion* pic.twitter.com/efYFbghTCJ
அதாவது ஐபிஎல் போட்டிக்காக சென்னை வரும்போது பிரபல ஹோட்டலில் தோனி தங்கும் அறையை புக் செய்து அங்கிருந்து சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் ஐபிஎல் போட்டிகளை கண்டுள்ளனர். மேலும் இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோவை சாந்தனு சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement