சினிமா

அட! இப்படியொரு பட டைட்டிலா.! பாக்யராஜுடன் இணையும் சாந்தனு! வெளியான பர்ஸ்ட் லுக் புகைப்படம்!

Summary:

Shanthanu murungaikai chips firstlook release

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு. இவர் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படம் ரிலீஸ் கொரோனா  ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது நடிப்பில் உருவாகும் ராவண கோட்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து சாந்தனு  அறிமுக இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். மேலும் அப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதுல்யா நடிக்கிறார். அவர்களுடன்  மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நடிகர் பாக்யராஜும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை  ரவீந்தர் சந்திரசேகர், சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து  தயாரிக்கவுள்ளனர்.

மேலும் இந்தப் படத்திற்கு  முருங்கைகாய் சிப்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று  தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்குப் பிறந்த நாள். அதை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.


Advertisement