காதல் படத்தில் முதலில் இந்த பிரபல நடிகரின் மகன் தான் நடிக்க இருந்தாராம்! வெளியான புதிய தகவல்shanthanu-kadhal-movie

காதல் திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படம் தென்னிந்தியத் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் விருதான பில்ம்பேரின் 2004 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் என விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

Kadhal

இந்நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் பிரபல நடிகரான பாக்கியராஜ் அவர்களின் மகன் சாந்தனுவை தான் முதலில் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அப்போது பாக்கியராஜ் அவர்கள் தான் பையன் நடுக்கும் முதல் படம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என கூறி தட்டி கழித்துவிட்டாராம்.