மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
பிரம்மாண்டமாக உருவாகப்போகும் இந்தியன் 3.. உண்மையை உடைத்த பிரபலம்.?
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கிய திரைப்படங்கள் எல்லாமே மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவானவை. மேலும் சங்கர் என்றாலே ஹிட் திரைப்படங்களை மட்டும் தான் கொடுப்பார் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், காதல், அந்நியன், ஈரம், எந்திரன், நான், எந்திரன்2.0 போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்தன.
இதையடுத்து தற்போது இந்தியன் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தின் மூன்றாம் பாகமும் சங்கர் இயக்கப்போவதாக உறுதிபடாத தகவல் வெளிவந்துள்ளது. இதனால் கமல் மற்றும் சங்கரின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருந்து வருகின்றனர்.