மகாராஜாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரமித்துப்போய் இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

மகாராஜாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரமித்துப்போய் இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட பதிவு! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!


shankar-wish-rajamouli-for-rrr-movie

பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் உலகளவில் பிரபலமானவர் ராஜமௌலி. அவர் தற்போது ஆர்ஆர்ஆர் ரத்தம் ரணம் ரௌத்திரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ராம்சரண், ஜூனியர் என்டிஆர்,  ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் அந்த படத்தில் தேஜா, அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில்  அண்மையில் வெளிவந்தது. மேலும் அப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் பலரும் ஆர்ஆர்ஆர் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில், ஆர்ஆர்ஆர் அனைத்து காலத்திலும் எதிரொலிக்கும் ஒரு கர்ஜனை. ஈடு இணையற்ற அனுபவத்தை வழங்கிய ஒட்டுமொத்த பட குழுவிற்கும் நன்றி. ராம் சரணிடம் இருந்து அனல் பறக்கும் எனர்ஜி,  ஜூனியர் என்டிஆர் கதிரியக்க அலை நம் நெஞ்சங்களை வசீகரிக்கிறது. ராஜமௌலியின் கற்பனை எப்போதும் தோற்றதே இல்லை. மகாராஜா மௌலிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.