என் அன்பு நண்பா.. வேதனையுடன் இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட பதிவு! கண்கலங்கும் ரசிகர்கள்!!

என் அன்பு நண்பா.. வேதனையுடன் இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட பதிவு! கண்கலங்கும் ரசிகர்கள்!!


Shankar tweet about kv anand dead

பிரபல ஒளிப்பதிவாளரும், தமிழ் திரைப்பட இயக்குனருமான 54 வயது நிறைந்த கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் பாதிக்கபட்டு உயிரிழந்தார்.  இவர் அயன், மாற்றான், கோ, அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது திடீர் மரணம் திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் கே.வி ஆனந்த் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கே.வி.ஆனந்துடன் முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கர் வேதனையுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கே.வி.ஆனந்த் மறைந்த தகவல் கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். எனது இதயம் கனக்கிறது. என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது அன்பு நண்பரை இழந்துவிட்டேன். கே.வி.ஆனந்த், அற்புதமான ஒளிப்பதிவாளர், இயக்குனர். இந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது. உன்னை ரொம்ப மிஸ் செய்கிறேன் அன்பு நண்பா. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.