சினிமா

பேட்ட பாடலுக்கு போட்டியாக 2.0 இயக்குநர் சங்கர் வெளியிட்ட புதிய வீடியோ!

Summary:

Shankar released 2.0 video song for petta

2.0 படத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இயக்குநர் சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கம் 2.0 ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனிருத் இசையில் உருவான பேட்ட படத்தின் மரணமாஸ் பாடல் வரிகளுடன் கடந்த 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்களை அதே உற்சாகத்தில் தக்க வைக்கும் நோக்கத்தில்  சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேட்ட படத்தின் அடுத்த பாடலான "உல்லாலா.. " பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ளது. 

வெறும் 50 நாட்கள் இடைவெளியில் ரஜினியின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் அதேவேளையில் மிகப்பெரிய பட்ஜட்டில் உருவான 2.0 படத்தினை ரசிகர்கள் மறந்து பேட்ட படத்தினை பற்றி அதிகம் பேச துவங்கிவிட்டனர். 

இதனைத்தொடர்ந்து ரசிகர்களை மீண்டும் கவரும் நோக்கத்தில் இயக்குநர் சங்கர் 2.0 படத்தின் "புல்லினங்கால்" பாடலின் Official வீடியோவை பேட்ட பாடலுக்கு போட்டியாக இன்று மாலை வெளியிட்டுள்ளார். 


Advertisement