சினிமா

மேடையிலேயே கதறி அழுத ரோஜா வில்லி நடிகை! அனைவரையும் கண்கலங்கவைத்த வீடியோ!

Summary:

Shamli crying on award winning stage

தற்காலத்தில் சினிமாக்களுக்கு விட தொலைக்காட்சி சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். மேலும் அந்த தொடரில் வரும் நடிகர் நடிகைகளை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவர். அதேபோல வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை மோசமாக திட்டி தீர்ப்பர். 

 இவ்வாறு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான தொடர் ரோஜா. இத்தொடரில் அனு, பிரியா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர்  ஷாம்லி.

இந்நிலையில் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஷாம்லிக்கு விருது வழங்கப்பட்டது. அப்பொழுது மேடையில் பேசிய அவர் எனது அம்மா என்னுடன் சீரியலில் நடிக்கும் பிற நடிகைகளை பார்த்து நன்றாக நடிக்கிறார் என்று பாராட்டுவார்.

ஆனால் இதுவரை ஒரு நாள் கூட என்னை நல்லா நடிக்கிறாய் என கூறியதில்லை. மேலும் நான் இப்பொழுது விருது வாங்கிஇருக்கிறேன். இதுகூட அவர்களுக்கு பிடிக்குமா இல்லையானு தெரியவில்லை எனக் கூறி கதறி அழுதுள்ளார். அவர் பேசியதை கேட்டதும் அரங்கத்தில் உள்ள அனைவரும் கண்கலங்கியுள்ளனர். 


Advertisement