அடேங்கப்பா! தல அஜித்தின் மச்சினிச்சிக்கு இப்படியொரு திறமையா? இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ!!shamili-drawing-show-in-art-exhibition

தமிழ் சினிமாவில் அஞ்சலி, துர்கா, தைப்பூசம் போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷாமிலி. அவர் தல அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் உடன் பிறந்த சகோதரி ஆவார்.

 அதனை தொடர்ந்து ஷாமிலி 2009 இல் வெளியான ஓய் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பல படங்களில் நடித்த அவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீர சிவாஜி என்ற படத்திலும் நடித்திருந்தார். 

shamili

 இவர் நடிப்பில் மட்டுமின்றி, ஓவியத்திலும் பெருமளவில் தனது ஆர்வத்தை காட்டி வருகின்றார். மேலும் ஷாமிலி புகழ்பெற்ற ஓவியர் ஏ.வி.இளங்கோ என்பவரிடம் ஓவிய பயிற்சி பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து  அவர் சமீபத்தில் தான் வரைந்த அரை நிர்வாணமாக இருக்கும் பெண்கள் போன்ற சில ஓவியங்களை பெங்களூரில் நடைபெற்றுவரும் ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அவரது திறமையை கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.

shamili