சினிமா லைப் ஸ்டைல் Corono+

மீண்டும் வருகிறான் சக்திமான்.! தூர்தர்சன் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சக்திமான்.! மகிழ்ச்சியில் 90ஸ் கிட்ஸ்.!

Summary:

Shaktimaan set to return to TV screens amid coronavirus lockdown

கொரோனா வைரஸ் காரணாமாக மக்கள் அனைவரும் வீடுகளிலையே முடங்கியுள்ள நேரத்தில் வெற்றிபெற்ற பழைய தொடர்களை மீண்டும் ஒளிபரப்புகிறது தொலைக்காட்சி நிறுவனங்கள்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக உலகின் அணைத்து நாடுகளும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 8 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையியல், கொரோனவை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அணைத்து துறை நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகளும், சீரியல் படப்பிடிப்புகளும் கூட இதனால் தடைபட்டுள்ளது.

இதனை சமாளிக்க சீரியல்கள் ஒளிபரப்பான நேரங்களில் திரைப்படங்கள் ஒளிபரப்பாகிவருகிறது. சன் டீவியில் மெட்டி ஒலி, தங்கம் போன்ற தொடர்கள் மீண்டும் ஒளிபரப்பாகின்றன. இந்நிலையில், 90s கிட்ஸ்சின் விருப்பமான தொடர்களில் ஒன்றான சக்திமான் தொடர் தூர்தர்சன் தொலைக்காட்சியில் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

ஏப்ரல் மதத்தின் தொடக்கத்தில் இருந்து சக்திமான் தொடர் தூர்தர்சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 90ஸ் கிட்ஸ்ன் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவர இருக்கும் சக்திமான் தொடர் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement