சினிமா Covid-19

இவங்களையெல்லாம் பிடித்து அடிக்க வேண்டும்! செம ஆவேசத்தில் 90ஸ் கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான்! ஏன்? என்னாச்சு தெரியுமா?

Summary:

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பாகி சிறுவர்கள் மத்த

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 2005 வரை ஒளிபரப்பாகி சிறுவர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் சக்திமான். இந்த நிகழ்ச்சியை இயக்கி அதில் சக்திமானாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் முகேஷ் கண்ணன். மேலும் அவர் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோவாக இருந்தார். மேலும் இவர் மகாபாரதம் தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது 62 வயதாகும் முகேஷ் கண்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர் காலமானதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து முகேஷ் கண்ணா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வென்ற வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், நான் நல்ல ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருக்கிறேன். தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. எனக்கு உங்கள் ஆசீர்வாதங்கள் இருக்கின்றது.  நிறைய அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் நலத்துடன் இருப்பதை உறுதிப்படுத்த இங்கு வந்தேன். தன்னை பற்றி வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், மேலும் இதுபோன்ற வதந்தி பரப்புபவர்களை பிடித்து அடிக்க வேண்டும் என்றும் முகேஷ் கண்ணா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.


Advertisement