சினிமா

ஆதிபுருஷ்! ராமராக நடிக்கும் பிரபாஸை எதிர்க்கும் ராவணனாகும் பிரபல முன்னணி நடிகர்! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Summary:

Shaif alikhan act as ravananan character in adhipurush

பாகுபலி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் தற்போது தன்ஹாஜி இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது அவரது 22 வது படமாகும். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இப்படம்  3டி தொழில்நுட்பத்தில் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகவும், இதில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் முக்கியமான ராவணன் கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் சைப் அலிகான் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் சீதா வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement