சினிமா

வேலை விஷயமாக சென்ற போது அவர் என்னை.. ராதாரவி மீது அதிரடி பாலியல் புகார், அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

sex abuse complaint on radharavi

நடிகர் ராதாரவி மீது பெண் ஒருவர்  பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் நாளுக்கு நாள்  நடிகர்கள்,இயக்குனர் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் மீது பாலியல் புகார் அளிப்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் கவிப்பேரரசர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததாகவும் டுவீட் ஒன்றை வெளியிட்டார்.

  இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் மற்றொருப் பெண் ஒருவர் தன்னிடம் நடிகர் ராதாரவி தவறாக நடந்துக்கொண்டார்,வீட்டிற்கு தனியாக வா என கூறினார் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளிட்டுள்ளார்.

             

இது குறித்து அந்த பெண் பதிவிட்டதாவது, ராதாரவியை நான் வேலை விஷயமாக பார்க்க சென்ற போது அவர் என்னை வீட்டிற்கு அழைத்தார். பின் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் நல்லா வேலை செய் , நீயும் நல்லாத்தான் இருக்க, இனி உன் நண்பர்களோடு வரவேண்டாம், தனியாக வா என்றார். 

பின்னர் நான் என் வேலையை விட்டுவிட்டேன் .அவருக்கு நிறைய அரசியல் செல்வாக்கு மற்றும் சினிமா துறையில் செல்வாக்கு உள்ளது. அதனால் நான் என் கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டேன் என்று கூறியுள்ளார் .
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement