சினிமா விளையாட்டு

என்னை படுக்கையில் தள்ளி ... பாலியல் சர்ச்சையில் சிக்கிய அடுத்த பிரபலம், சின்மயி வெளியிட்ட அதிரடி தகவலால் அதிர்ச்சி.!

Summary:

sex abuse complaint on cricket player

 இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக பெண் ஒருவர் ட்வீட் செய்துள்ளதை பாடகி சின்மயி பகிர்ந்துள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல பல பெண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பிரபலங்களின் பெயர்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர்.மேலும் சின்மயி அதை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி ஷேர் செய்துள்ளார். 

அதில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் இருந்தேன்.
அப்போது நான் தங்கியிருந்த ஹோட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை நான் தேடினேன். அப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.அவர் உயரமாக வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹோட்டல் ஊழியர் ஒருவர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.

இதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement