சினிமா

இளம் நடிகை திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் திரையுலகினர்!

Summary:

serial artist suicide

மேற்கு வங்கத்தில் இளம் சின்னத்திரை நடிகையான சுபர்ணா ஜாஸ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியைச் சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான  வங்க மொழிப் படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு  திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement