சினிமா

நடிக்க வருவதற்கு முன்பு நடிகை வாணி போஜன் என்ன வேலை செய்தாராம் தெரியுமா? இதோ!

Summary:

Serial actress vani bojan past work details

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் ஓன்று தெய்வமகள். இதில் சத்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரனான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார்.

தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுள்ள இவர் நிதின் சத்யா தயாரிப்பில் நடிகர் வைபவுக்கு ஜோடியாக ஒருபடத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையில் மிகவும் பிரபலமான இவர் நடிக்க வருவதற்கு முன்பு என்ன வேலை பார்த்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் ஏர் ஹோஸ்டர்ஸ் பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார் வாணி போஜன். இவர் வேலைபார்த்து வந்த விமான நிறுவனம் நிதிநிலை காரணமாக பல நபர்களை பணி நீக்கம் செய்தது. அதில் வாணி போஜனும் ஒருவர். அதன்பிறகு மாடலிங் துறையில் அறிமுகமாகி ஒருசில விளமபரங்களில் நடித்துள்ளார்.


Advertisement