சினிமா

நிஜமாவா!! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்திற்கு இவ்வளவு பெரிய மகனா!! வைரலாகும் புகைப்படம்..

Summary:

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சுஜிதாவின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சுஜிதாவின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருப்பவர்தான் பிரபல சீரியல் நடிகை சுஜிதா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சுஜிதாவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்று. இந்த தொடரின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு சுஜிதாவும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செதுக்கி வருகிறார் சுஜிதா.

சுஜிதாவுக்கு திரைப்பயணம் ஒன்றும் புதிதல்ல. முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியதில் இருந்து, ஏராளமான படங்கள், சீரியல்,விளம்பரம், மாடலிங் என நாளுக்கு நாள் தனது நடிப்பு திறனை மெருகேற்றிக்கொண்டே உள்ளார் சுஜிதா.

இந்நிலையில் சுஜிதாவுக்கும், விளம்பரப் படங்களை இயக்கும் தனுஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். திரையை தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்துவரும் சுஜிதா, சமீபத்தில் தனது மகனுடன் ஒரே மாதிரியான உடை அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

37 வயதிலும் பார்க்க இன்றுவரை இளமையாக இருக்கும் சுஜிதாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா? என புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement