கோலாகலமாக நடந்து முடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திருமணம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!

கோலாகலமாக நடந்து முடிந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை திருமணம்! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!!


serial-actress-shruti-got-marriage

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரின் துவக்கத்தில் சௌந்தர்யாவின் மகளாக, ஹீரோ பாரதியின் அக்காவாக நடித்தவர் ஸ்ருதி. பின்னர் ஒருசில மாதங்களிலேயே அவரது கதாபாத்திரம் காணாமல் போனது.

மேலும் ஸ்ருதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் தொடரிலும் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவர் மத்தியிலும் பெருமளவில் பரிச்சயமானார். அதுமட்டுமின்றி அவர் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ருதிக்கு அரவிந்த் என்பவருடன் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அத்தகைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் அதனை கண்ட பலரும் புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.