”என் தேவதை” வீடியோ போட்டு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை!Serial actress shamili daughter photo

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா. இந்த  தொடருக்கென இளையர்கள் முதல்  இல்லதரசிகள்  வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த  தொடரில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூரியன் மற்றும் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்தத் தொடரில் முதலில் அனு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷாமிலி சுகுமார். இவரது  நடிப்பு ரசிகர்களிடையே  நல்ல  வரவேற்பை  பெற்றது.

இந்த நிலையில் ஷாமிலி கர்ப்பமாக இருந்த  நிலையில் கொரோனா காலம் என்பதால் சீரியலில் இருந்து  பாதியிலே விலகினார்.

மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார். சமீபத்தில் தான்  அவருக்கு பெண் குழந்தை  பிறந்த நிலையில், தனது  மகளின்  புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராம்மில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த புகைப்படம்....