அதிர்ச்சி.! விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்.!?Serial actress saidra reddy viral post about accident

சன் தொலைக்காட்சிகள் பல எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பு பட்டு வரும் சீரியல் கயல். இந்தத் தொடரின் முக்கிய கதாநாயகியாக இருந்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் இதற்கு முன்னதாக யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவ்வாறு தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருகிறார் சைத்ரா ரெட்டி.

actress

சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளி திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி புகைப்படம் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இவ்வாறு பிசியான நடிகையாக இருந்து வரும் சைத்ரா ரெட்டிக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

actress

அவர் பதிவில், "நான் மேம்பால கீழ் சென்று கொண்டிருந்தேன். அப்போது திடீரென பெரிய சிமெண்ட் கலவை என் காரின் முன் பக்கத்தில் விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக எனக்கு எதுவும் ஆகவில்லை. காரின் உள்ளே இருந்ததால் எதுவும் விபத்து ஏற்படவில்லை. நடந்து சென்று கொண்டிருந்தாலோ, பைக்கில் சென்று கொண்டிருந்தாலோ விபத்தாகி இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார். இப்பதிவும் விபத்தாகிய புகைப்படமும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.