அடேங்கப்பா.. வேற லெவல்தான்! பீச்சில் செம கெத்து காட்டிய தெய்வமகள் அண்ணியார்! வைரலாகும் புகைப்படங்கள்!!
சன் தொலைக்காட்சியில் சுமார் மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் தொடரில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில், ஹீரோவின் அண்ணியாக, பயங்கர வில்லியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ரேகா கிருஷ்ணப்பா.
அதனைத் தொடர்ந்தும் அவர் ஒரு சில தொடர்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் பலரையும் மிரளவைத்துள்ளார். பின்னர் நடிப்பிற்கு சில காலங்கள் இடைவெளி விட்ட ரேகா மீண்டும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகை ரேகா எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்க கூடியவர்.
அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் ரேகா தற்போது கடற்கரையில் செம மாசாக கூலிங் கிளாஸ் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் தெய்வமகள் அண்ணியார் வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.