நிச்சயம் என்னை வெறுப்பீங்க! 7 வருடங்களுக்கு பிறகு.. பிரபல வில்லி வெளியிட்ட ஷாக் பதிவு!!

நிச்சயம் என்னை வெறுப்பீங்க! 7 வருடங்களுக்கு பிறகு.. பிரபல வில்லி வெளியிட்ட ஷாக் பதிவு!!


Serial actress pooja logesh re entrybin colors tamil serial

 சீரியல்களில் சினிமாக்களை போலவே பயங்கரமான வில்லதனங்களால், பார்வையாளர்களையே மிரள வைக்கும் வகையில் வில்லன், வில்லிகளும் உள்ளன. மேலும் அத்தகைய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து, மக்களிடம் பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். 

அவ்வாறு பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் வில்லியாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமானவர் பூஜா லோகேஷ். இவர் தமிழில் செல்வி, குங்குமம், முந்தானை முடிச்சு, மகாபாரதம், கல்கி, கீதாஞ்சலி, உயிர்மெய், அத்திப்பூக்கள், முத்தாரம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சில காலங்கள் நடிப்பிற்கு இடைவெளிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீண்டும் கேமரா முன்பு வருகிறேன். நான் தமிழ் சின்னத்திரையில் நடிக்கிறேன். நடிகை குஷ்புவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கடந்த 7 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டது. தற்போது உங்கள் அனைவரின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.  நீங்கள் நிச்சயம் என்னை வெறுப்பீர்கள் என கூறியுள்ளார்.