ஈடு செய்ய முடியாத இழப்பு.. சீரியல் நடிகை நிஷா வீட்டில் நேர்ந்த துயரம்! வேதனையுடன் அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

ஈடு செய்ய முடியாத இழப்பு.. சீரியல் நடிகை நிஷா வீட்டில் நேர்ந்த துயரம்! வேதனையுடன் அவர் வெளியிட்ட உருக்கமான பதிவு!!


serial actress nisha grandmother dead

பிரபல சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் மனைவியுமான நிஷாவின் பாட்டி உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஷா. அதனைத் தொடர்ந்து பிரபலமான அவர் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்தார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தலையணைப் பூக்கள் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவரது கணவர் கணேஷ் வெங்கட்ராமன். அவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர். அவர்களுக்கு சமைரா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் நடிகை நிஷாவின் பாட்டி அண்மையில் காலமாகியுள்ளார். 

இதுகுறித்து மிகவும் உருக்கமாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 
 தன்னுடைய வாழ்க்கையில் நிரப்பமுடியாத நபர் ஒருவரை இழந்துவிட்டேன். அதுதான் எனது கமலா பாட்டி, அவர் ஒரு சிறந்த குக், சிறந்த ஆதரவாளர், வாழ்க்கைக்கான ஆசிரியர், என்னுடைய காமெடியன், நல்ல நண்பன். உங்களது இழப்பை யாராலும் நிரப்ப முடியாது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.