"குளிக்கும்போது இதை தான் செய்வேன்" பகீர் கிளப்பிய சீரியல் நடிகை பவித்ரா ஜனனி.!serial-actress-latest-interview

கடந்த 2013ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆபிஸ்" என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் பவித்ரா ஜனனி. இதைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி, மெல்லத் திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

pavithra

தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடித்து வரும் பவித்ரா ஜனனி, தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி, எப்போதாவது தனது புகைப்படங்களை வெளியிடுவார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பவித்ரா ஜனனி, அவரது சிறுவயது பயம் குறித்துப் பேசினார். அதில் அவர், "எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு பயம் இருக்கிறது. அது கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சோப்புக்கள் தான்.

pavithra

இவற்றைப் பயன்படுத்துவதால் ஏதாவது பக்கவிளைவுகள் வந்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே நான் குளிக்கும்போது கடலை மாவு, பச்சைப் பயறு உள்ளிட்ட பொருட்களை தான் பயன்படுத்துவேன்" என்று பவித்ரா ஜனனி கூறியுள்ளார்.