சினிமா

சீரியலுக்காக தளபதி விஜய் படவாய்ப்பை தவறவிட்ட விஜய் டிவி பிரபலம்! வருத்தத்துடன் அவரே கூறிய தகவல்!

Summary:

serial actress kavya miss chance of bigil movie

அட்லி இயக்கத்தில் மூன்றாவது  விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் பிகில். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகிய இப்படம் கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாக பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்துவரும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. காதல் மற்றும் குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த தொடரில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. மிகவும் கலகலப்பாக நடித்துவரும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் நடிகை காவ்யா  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு பிகில் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில்  ஒருநாள் அவர்கள் எனக்கு போன் செய்து திண்டிவனத்திற்கு சூட்டிங்கிற்கு வரக் கூறினார்கள். ஆனால் அன்றுதான் எனக்கு பாரதிகண்ணம்மாவின் ஷூட்டிங்கும் இருந்தது. நான் எப்பொழுதும் அந்த சமயத்திற்கு ஏற்றவாறு முடிவெடுக்கக் கூடியவர். இந்நிலையில் எனக்கு அப்பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்றே தோன்றியது. பிகில் பட ஷூட்டிங்கிற்கு போக வேண்டும் என தோணவில்லை. ஆனால் தற்போது தளபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டோமே என மிகவும் வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.
 


Advertisement