சினிமா

என்னுடைய உடல்மொழி நான் உங்களை படுக்கைக்கு அழைப்பதுபோல் தோன்றியதா.? படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகரை நேரில் கேட்ட சீரியல் நடிகை.!

Summary:

Serial actor pragathi complaint about famous comedian

முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடக்க முயன்றதாக நடிகை பிரகதி பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விசேசங்க என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. ஒருசில படங்களில் நடித்த இவர் சரியான வரவேற்பு இல்லாததால் தற்போது சீரியலில் கவனம்செலுத்திவருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனை கிளி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் பிரகதி.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் தனது மகனுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட, அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் காலை வேளையில் என்னிடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரகதி. அவருடைய மரியாதையை கருதி நான் அங்கிருந்தவர்கள் முன் அவரை காயப்படுத்த விரும்பவில்லை.

மாலையில் அவரை கேரவனுக்கு வரவழைத்து பேசினேன், நீங்கள் என்னிடம் அப்படி கேட்க, நான் ஏதாவது சமிஞ்கை கொடுத்தேனா, அல்லது என் உடல்மொழி உங்களுக்கு என்னிடம் அப்படிக் கேட்க தோன்றியதா என்று கேட்டேன். அவர் அதற்கு இல்லை என பதில் கூறியதாக பிரகதி கூறியுள்ளார். ஆனால் கடைசிவரை அந்த முன்னணி காமெடி நடிகரின் பெயரை பிரகதி கூறவே இல்லை.


Advertisement