சினிமா

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த செந்தில் - ராஜலெட்சுமியின் கொரோனா பாடல்..! வைரலாகும் வீடியோ.

Summary:

Senthil rajalakshmi sang corona song

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்நோயால் இந்தியாவில் இதுவரை 10க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்நோயின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்ற 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் கொரோனா நோய் குறித்த பல விழிப்புணர்வுகளை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் - ராஜலெட்சுமி தம்பதியினர் கொரோனா குறித்த பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளனர்.

தற்போது அந்த பாடல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் லைக்குகளையும் குவித்து வருகிறது. 

View this post on Instagram

@vijaytelevision #corona #covid_19

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on


Advertisement