அட... சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் - ராஜலட்சுமியா இது... ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இவ்வளவு ஒல்லியாக இருக்காங்களே... வைரலாகும் திருமண புகைப்படம்!!

அட... சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் - ராஜலட்சுமியா இது... ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இவ்வளவு ஒல்லியாக இருக்காங்களே... வைரலாகும் திருமண புகைப்படம்!!


Senthil rajalakshmi marriage photos viral

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஜூனியர் மற்றும் சீனியர் என மாற்றி மாற்றி ஒளிப்பரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர். அந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 யின் சீனியர் ரவுண்டில் போட்டிய்ளர்களாக கலந்து கொண்டு நாட்டு புற இசையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர்.

இதில் செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பட்டத்தை கைப்பற்றினார். அதன் மூலம் தமிழ் சினிமாவின் பல்வேறு படங்களில் பாடும் வாய்ப்புகள் இவர்களுக்கு குவிந்தது. சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் இன்றுவரை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. மேலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அய்யா சாமி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த  பாடலும் ரசிகர்கள்  மத்தியில் ஹெட் அடித்து உள்ளது.

Senthil

இந்நிலையில் தற்போது செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் இருவரும் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மிகவும் ஒல்லியாக இருக்கின்றனர். 

Senthil