சினிமா

காமெடி நடிகர் செந்திலா இது! பயங்கர மாடர்னாக, செம ஸ்டைலாக ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! வைரலாகும் புகைப்படம்!

Summary:

நடிகர் செந்தில் பயங்கர மாடர்னாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில், நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து காமெடியில் அசத்தி முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் செந்தில். மேலும் கவுண்டமணியுடன் இணைந்து இவர் நடித்த வாழைப்பழம் காமெடி இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.

பெரும்பாலும் கவுண்டமணியுடன் இணைந்து நடித்துவந்த நடிகர் செந்தில்  நாளடைவில் வயது முதிர்வின் காரணமாக சினிமாவிலிருந்து விலகினார்.  அதனைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார்.

பின்னர் தற்போது மீண்டும் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் செந்தில் தற்போது ஹாலிவுட் பாப் பாடகர்களையே மிஞ்சும் அளவிற்கு செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் நடிகர் செந்திலா இது?  செம ஸ்டைலாக இருக்கிறாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.  


Advertisement