ஜீன்ஸ், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ்! ஆளே மாறிப்போன சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்! சூப்பர் லுக் புகைப்படம்.

ஜீன்ஸ், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ்! ஆளே மாறிப்போன சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ்! சூப்பர் லுக் புகைப்படம்.


senthil-ganesh-with-jeans-pant-and-t-shirt-photo-goes-v

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் கணவன் மனைவியான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி. தனது திறமையால் பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு சூப்பர் சிங்கர் பட்டத்தை கைப்பற்றினார் செந்தில் கணேஷ். 

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பெற்ற வெற்றியின் மூலம் அவருக்கு சினிமாவில் படுவதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. மேலும் அவர் தனது மனைவி ராஜலக்ஷ்மியுடன் ஜோடி சேர்ந்து  சார்லி சாப்ளின் 2 படத்தில் சின்ன மச்சான் பாடலையும், விஸ்வாசம் படத்தில் டங்கா டங்கா போன்ற பாடலையும் பாடியுள்ளனர்.

senthil ganesh

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் இருவரும் இணைந்து பாடி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வேட்டி சட்டையுடன் களமிறங்கி கலக்கிய செந்தில் கணேஷ் தற்போது ட்ரெண்டுக்கு ஏத்தாற்போல் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட் அணிந்து, கண்ணில் கூலிங் கிளாஸ் மாட்டி ஆளே பயங்கர மாடர்னாக மாறியுள்ளார்.

அவரது இந்த மாடர்ன் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அட, நம்ம செந்திலை கணேஷா இது என கேட்கும் அளவிற்கு செம ஸ்டைலாக உள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

senthil ganesh