செந்தில் கணேஷ் வெளிநாட்டு பெண்ணுடன் சேர்ந்து செய்யுற காரியத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!!

செந்தில் கணேஷ் வெளிநாட்டு பெண்ணுடன் சேர்ந்து செய்யுற காரியத்தை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!!


senthil ganesh talk in tamil with america girl

விஜய் தொலைக்காட்சி எத்தனையோ திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களை பிரபலமாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என பல நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்களே. 

அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபாலமானார்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடி. அவர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நிலையில் ராஜலக்ஷ்மி பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் செந்தில் கணேஷ் கடைசி வரை சென்று வெற்றிபெற்று பட்டத்தை கைப்பற்றினார் .

senthil ganesh

 அதனை தொடர்ந்து இருவரும் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக பாடிவருகின்றனர். சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலம். மேலும் பல படங்களுக்கும் பாடல்களை பாடி வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர் அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது அவர்கள் வெளிநாட்டு பெண்மணி ஒருவரை சந்தித்து பேசியுள்ளனர். மேலும் அந்த பெண்ணும் தமிழில் பேசி அசத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.