சினிமா

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

சூப்பர் சிங்கர் பிரபலமான செந்தில் கணேஷ் தனது வீட்டில் நடந்த விசேஷம் குறித்த புகைப்படத்தை வ

சூப்பர் சிங்கர் பிரபலமான செந்தில் கணேஷ் தனது வீட்டில் நடந்த விசேஷம் குறித்த புகைப்படத்தை வெளியிட்ட நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு ஏராளமான கிராமியப் பாடல்களைப் பாடி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர்.

கணவன், மனைவியான அவர்கள் ஜோடியாக மண் மணம் மாறாமல் பாடிய கிராமியப் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் 6ன் வெற்றியாளரானார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் சினிமாவிலும் பாடும் வாய்ப்புகள் குவிந்தது. மேலும் இருவரும் வெளிநாடுகளுக்கும் சென்று தங்களது குழுவுடன் இசை கச்சேரியை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்மையில் செந்தில் கணேஷ் வீட்டில் விசேஷம் நடைபெற்றுள்ளது. அதாவது அவரது தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
 


Advertisement