செந்தில்- ராஜலக்ஷ்மி தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சகட்ட சந்தோஷத்தில் காதல் ஜோடி! வைரலாகும் புகைப்படம்!

செந்தில்- ராஜலக்ஷ்மி தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சகட்ட சந்தோஷத்தில் காதல் ஜோடி! வைரலாகும் புகைப்படம்!


senthil ganesh rajalakshmi got award

விஜய் தொலைக்காட்சி பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களை பெருமளவில் பிரபலமாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என பல நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் வந்தவர்களே ஆவர். 

அவர்கள் வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். அவர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நிலையில் ராஜலக்ஷ்மி பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். மேலும் செந்தில் கணேஷ் மட்டும் கடைசி வரை சென்று வெற்றிபெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

senthil ganesh

அதனை தொடர்ந்து இருவருக்கும் பாடல் வாய்ப்புகள் குவிந்தது. அவர்கள் சார்லி சாப்ளின் படத்தில் பாடிய சின்ன மச்சான் பாடல் பெருமளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரீச்சானது. அதனை தொடர்ந்து அவர்கள் பல படங்களுக்கும் பாடல்களை பாடி வருகின்றனர். மேலும்வெளிநாட்டிற்கு சென்று மேடை கச்சேரிகளுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில்  நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் தம்பதியினர் இருவருக்கும் அவர்களின் திறமைக்காகவும், காதலுக்காகவும் விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இந்த புகைப்படத்தை செந்தில் கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.

View this post on Instagram

tqq behindwoods

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk) on