சொந்த ஊரில் தடபுடலாக விருந்து வைக்கும் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி! என்ன காரணம் தெரியுமா?

சொந்த ஊரில் தடபுடலாக விருந்து வைக்கும் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி! என்ன காரணம் தெரியுமா?


senthil-ganesh-rajalakshmi-daughter-birthday

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். புதுக்கோட்டை மாவட்டதை சேர்ந்த நாட்டுப்புற பாடகர்களான இவர்களை அடையாளம் கண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியது விஜய் தொலைக்காட்சி.

கணவன், மனைவியான இவர்கள் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடினர். போட்டியின் இறுதி வரை சென்று சூப்பர் சிங்கர் படத்தையும், 50 லட்சம் மதிப்புள்ள வீட்டையும் பரிசாக பெற்றார் செந்தில் கணேஷ். தற்போது தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் பாடல்கள் பாடி வருகின்றனர்.

senthil ganesh

இந்நிலையில் தனது சொந்த ஊரில் கரி விருந்தோடு விருந்து வைத்துள்ளார் செந்தில்கணேஷ். அதற்கு காரணம், அவரது மகள் பிறந்தநாளாம். இன்று அவரது இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு எனது மூன்றாவது தாய்க்கு இன்று இரண்டாவது பிறந்தநாள், எனது தாய் கிராமான கலம்பத்தில் கருவிருந்து அனைவரும் வருக என பதிவிட்டுள்ளார் செந்தில் கணேஷ்.