யாருக்கும் தெரியாமல் செந்தில் கணேஷ் செய்த அசத்தல் காரியம்! ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஒத்த புகைப்படம்!

யாருக்கும் தெரியாமல் செந்தில் கணேஷ் செய்த அசத்தல் காரியம்! ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த ஒத்த புகைப்படம்!


senthil ganesh help srilanka tamizhan

 விஜய் தொலைக்காட்சி பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் அவர்களை பெருமளவில் பிரபலமாகியுள்ளது.அவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோசங்கர் என பல நடிகர்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கின்றனர்.

அவர்களை போலவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ்ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர். அவர்கள் இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய நிலையில் ராஜலக்ஷ்மி பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனார். ஆனால் செந்தில் கணேஷ் மட்டும் கடைசி வரை சென்று வெற்றிபெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

senthil ganesh

அதனை தொடர்ந்து இருவருக்கும் பல்வேறு படங்களில் பாடல் வாய்ப்புகள் குவிந்தது. மேலும் வெளிநாட்டிற்கு சென்று மேடை கச்சேரிகளுக்கு செய்து வருகின்றனர். இந்நிலையில் செந்தில் கணேஷ்– ராஜலட்சுமி தம்பதியினர்அண்மையில் கச்சேரி ஒன்றிற்காக லண்டன் சென்றிருந்தனர். மேலும் அந்த புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில்  வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் அதனை கண்ட ரசிகர் ஒருவர் இப்படி பயணங்களுக்கு செலவழிப்பதற்கு பதிலாக ஈழத்து ஏழைகளுக்கு உதவி செய்யலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு செந்தில் கணேஷ் தனக்கு கிடைத்த வருமானத்தில் 50,000 ரூபாயை ஈழத்து ஏழைப்பிள்ளைகளின் கல்விச்செலவிற்காக ஈழத்துப் போராளி ஈழவன் எனும் ஈசன் அவா்களிடம் கொடுத்துவிட்டு வந்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.