விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் சூப்பர்ஹிட் சீரியல்! அட.. எந்த தொடர் பார்த்தீங்களா!!

விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் சூப்பர்ஹிட் சீரியல்! அட.. எந்த தொடர் பார்த்தீங்களா!!semparuthi-serial-going-to-end-soon

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடனும், மிகவும் சுவாரஸ்யமாகவும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, செம்ம ஹிட்டான தொடர்தான் செம்பருத்தி. இந்த தொடர் ரசிகர்கள் மனதை பெருமளவில் கவர்நது டிஆர்பியில் முன்னணியில் வந்து சாதனை படைத்தது. 

செம்பருத்தி தொடரில் துவக்கத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் மற்றும் பார்வதியாக ஷபானா நடித்து வந்தனர். இந்நிலையில் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் தொடரிலிருந்து விலகிய நிலையில் தற்போது அகினி என்பவர் ஆதியாக நடித்து வருகிறார். இதில் அகிலாண்டேஸ்வரியாக நடிகை பிரியாராமன் கெத்தான கதாபாத்திரத்தில் மிரள வைத்துள்ளார்.

Semparurhi

இவ்வாறு நாளுக்கு நாள் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் 1400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இதன் கிளைமேக்ஸ் காட்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.