கொட்டும் மழையில் காதலரை கரம்பிடித்த செம்பருத்தி ஷபானா! வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படங்கள்!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் வந்து செம ஹிட்டான தொடர் செம்பருத்தி. இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் ஷபானா. இவருக்கு சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஷபானா அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை காதலிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் கேட்டு வந்தநிலையில், இன்று அவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஷபானா மற்றும் ஆர்யனின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.