என்னை ரொம்ப அசிங்கபடுத்திட்டீங்க.. ஜீ தமிழ் மீது வேதனையுடன் செம்பருத்தி சீரியல் நடிகை புகார்.! ஏன்? என்னாச்சு??Semparuthi serial actress mounika complaint on


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இத்தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி தொடர் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது.

செம்பருத்தி சீரியல் கிளைமாக்ஸ் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் பல மணி நேரம் ஒளிபரப்பானது. தொடரின் இறுதியில் வில்லி நந்தினி, வனஜா மற்றும் அகிலாண்டேஸ்வரி இறந்துவிடுகின்றனர். மேலும் செம்பருத்தி சீரியல் வெற்றி விழாவும் நடைபெற்றது. அதில் நடிகர், நடிகைகள் மற்றும் சீரியல் குழுவினர் பலரும் கலந்துகொண்டு கௌரவிக்கப்பட்டனர்.

semparuthi

இந்நிலையில் தொடரில் வில்லி நந்தினியாக நடித்த நடிகை மௌனிகா ஜீ தமிழ் மீது புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் அவர், செம்பருத்திக்காக நான் எனது பெஸ்ட் கொடுத்தேன். ஆனால் அதனை சேனல் எனக்கு திருப்பி தரவில்லை. செம்பருத்தி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த நடிகைகளை மட்டும் கொண்டாடுகிறீர்கள். என்னை மதிக்க வேண்டும் என உங்களுக்கு ஏன் தோன்றவில்லை ஜீ தமிழ்.

எனக்கு எதற்காக அழைப்பு விடுத்தீர்கள். என்னை கௌரவிக்கும் மொமெண்டோ எங்கே. என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள். நான் சோகமாகதான் இருக்கிறேன். ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டு என்னை கொண்டாடுகிறார்கள்.  அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது எனக் கூறியுள்ளார்.