தமிழிலிருந்து தெலுங்கு சினிமாவிற்கு பாய்ந்த செல்வராகவன்.. எந்த படத்தில் தெரியுமா.?

தமிழிலிருந்து தெலுங்கு சினிமாவிற்கு பாய்ந்த செல்வராகவன்.. எந்த படத்தில் தெரியுமா.?



Selvaragavan acting in tollywood cinema

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து பெயர் பெற்ற இயக்குனராக வலம் வந்தார்.

Selvaragavan

இயக்குனராக தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, பர்ஹானா, ஆயிரத்தில் ஒருவன், காதல் கொண்டேன், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகராகவும் இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பகாசூரன், சாணிக்காயிதம், மிருகம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்று உள்ளது.

Selvaragavan

இது போன்ற நிலையில், தற்போது தெலுங்கில் கோபிசந்த் மாலினேனி, இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் செல்வராகவன். இவர் முதன்முதலில் தெலுங்கில் நடிக்கவிருக்கும் திரைப்படம் என்பதால் இவரது ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.